பிரதான செய்திகள்

மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா அரபுக் கல்லூரியின் ஆலிமாக்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக ரிஷாட்!

மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது “அல்-ஆலிமாக்களுக்கான பட்டமளிப்பு விழா” இன்று தாராபுரம் அல்-மினா மகா வித்தியாலத்தின் கேட்போர்கூடத்தில் அரபுக்கல்லூரியின் அதிபர்களான இல்ஹாம், சஹ்துல்லாஹ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டதுடன், விஷேட பேச்சாளராக அல்-ஹாபிழ் அல்/பாழில் றிஸ்வி(இஹ்யாயீ) கலந்துகொண்டு உரையாற்றி ஆலிமாக்களுக்கான பட்டமளிப்புக்களையும் வழங்கி வைத்தனர்.

இதில் ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் நிர்வாகிகள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை !

Editor

காத்தான்குடி பொலிஸ் பிரில் சட்டவிரோத மண் அகழ்வு

wpengine

கோத்தபாய ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளார்! பேஸ்புக் குழுவினை நாடும் கோத்தா

wpengine