பிரதான செய்திகள்

மன்னார், தள்ளாடியில் ஆணின் சடலம்! வயது 50

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் காணப்படுவதாக மன்னார் காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி மன்னார் காவல்துறையினரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் என மன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடல் முழுவதும் எரிந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் காணப்பட்ட இடத்துக்கு வருகைதந்த குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மன்னார் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விக்னேஸ்வரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வவுனியாவில்! பொதுபல சேனா

wpengine

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு! அனைத்தையும் நிறுத்தவும்.

wpengine

கலைஞர்கள் ,ஊடகவியலாளர்கள் நீதவான் பதவி -விஜயதாஸ ராஜபக்‌ஷ

wpengine