பிரதான செய்திகள்

மன்னார் தனியார் பேரூந்தின் உரிமையாளரான விமலதாசன் பலி! மனைவி படுகாயம்

மன்னார்- தலை மன்னார் பிரதான வீதி, புதுக்குடியிறுப்பு சந்தி கோணர் பண்ணை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மதியம் இடம் பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளதோடு, அவரது மனைவி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் ஆண்டாங்குளம் -ஆக்காட்டி வெளி கிராமத்தை பிறப்பிடமாகவும் , மன்னார் சாந்திபுரம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட தனியார் பேரூந்தின் உரிமையாளரான வி.விமலதாசன் (வயது-49) என தெரிய வருகின்றது.

-குறித்த குடும்பஸ்தர் மன்னாரில் இருந்து தலை மன்னார் நோக்கி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த போது , தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி பொருட்களுடன் பயணித்த வாகனம் ஒன்று குறித்த மோட்டார் சைக்கிலில் வந்தவர்களுடன் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

Related posts

உள்ளுராட்சி மன்ற தேர்தல்! அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கொந்தளிப்பு

wpengine

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை

wpengine

ஊழல் விசாரணை! பதவி நீக்கம் நவாஸ் ஷெரீப் வழக்கு தாக்கல்

wpengine