பிரதான செய்திகள்

மன்னார் சோதனைச் சாவடிக்கு அருகிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ள நிலையில் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரை ஒதுங்கிய சடலத்தில் நீல நிற சாரம் அரை காற்சட்டை மற்றும் கருப்பு நிற டி ஷர்ட் அணிந்த நிலையில் காணப்படுகின்றது.

இராணுவம் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் சடலத்தை பார்வையிட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போலியான குற்றச்சாட்டு அமைச்சர் றிஷாட் சி.ஐ.டி முறைப்பாடு

wpengine

அதிகாரசபையின்  பணிப்பாளராக இல்ஹாம் மரைக்கார்  நியமனம்.

wpengine

இத்தாலி வரலாற்றில் பெண் முதல் நகர முதல்வர்

wpengine