மன்னார்-எருக்கலம்பிட்டியில் பகுதியில் மஞ்சள் கடத்தல்

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 952 கிலோகிராம் நிறையுடைய மஞ்சள் கட்டி மூட்டைகள் மன்னார், எருக்கலம்பிட்டி பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.


கடற்படை புலனாய்வு தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே பதுக்கி வைக்கப்பட்டிருந்த குறித்த மஞ்சள் கட்டி மூட்டைகள் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பில் மன்னார் – எருக்கலம்பிட்டியை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares