பிரதான செய்திகள்

மன்னார் இ.போ.ச நிர்வாகத்தின் அசமந்தபோக்கு! மக்கள் பாதிப்பு பிரயாணிகள் விசனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மன்னாரில் இருந்து காலை 6 மணிக்கு  இலவங்குளம் பாதை ஊடாக ஆலங்குடா செல்லும் NB/8823 இலக்கம் கொண்ட பஸ் கொண்டச்சி பகுதியில் வைத்து முழுமையாக இயங்க முடியவில்லை இதன் காரணமாக இதில் பயணம் செய்த அரசாங்க உத்தியோகத்தர்கள்,நோயாளிகள்,பாடசாலை மாணவர்கள்,முதியோர்கள் பல மணி நேரம் அசௌகரியங்களை முகம்கொடுத்துள்ளார்கள் என எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சாரதியினை தொடர்புகொண்டு வினவிய போது “நான் வேறு பஸ்ஸின் சாரதியாக தொழில் புரிந்த போது மற்றைய பஸ்ஸினை என்னிடம் தந்துள்ளார்கள் அதன் காரணமாக பஸ்ஸின் நிலை பற்றி எனக்கு தெரியவில்லை என்றும்,மிகவும் கவலையுடன் தெரிவித்தார்.

இந்த நேர பஸ்ஸில் அதிகம் இஸ்லாமிய பிரயாணிகள் செல்வதன் காரணமாக தங்களுடைய ஜூம்மா தொழுகையினை உரிய முறையில் தொழுதுகொள்ளவில்லை எனவும் இஸ்லாமிய பிரயாணிகள் கவலை தெரிவித்தனர்.

இது தொடர்பில் மன்னார் போக்குவரத்து சாலை முகாமையாளர்,நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென போக்குவரத்து பிரயாணிகள் கோரிக்கையினை விடுத்துள்ளார்கள்.

Related posts

முசலி நில மீட்பு போராட்டத்தை காட்டிக்கொடுத்து,மலினப்படுத்துவதற்கு துணை-அமைச்சர் றிஷாட் ஆவேசம்

wpengine

சம்மாந்துறை IIFAS அமைப்பின் கல்விக் கருத்தரங்கு

wpengine

சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தூண்டும் புதுமையான அரசியல்

wpengine