பிரதான செய்திகள்

மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் விழா (படம்)

மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்றைய தினம்(20) மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்விற்கு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சுகந்தி செபஸ்தியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இதன்போது, பாடசாலை மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் கடந்த 2015 ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சவுதி மன்னர் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

wpengine

தனுஷ்கோடி – தலைமன்னாருக்கு இடையே பாலம் அமைக்க முயற்சி

wpengine

கூட்டுறவுக்கொள்கை நவீனமயப்படுத்தப்படும் அமைச்சர் றிஷாட்

wpengine