பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் வலய கல்வி பணிப்பாளருக்கான பிரியா

மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று வருட காலமாக வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்று மாகாண மேலதிக கல்வி பணிப்பாளராக பதவியேற்கவுள்ள மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் ஜே.பிறட்லி மற்றும் மடு வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி யாழ்பாணம் வடமராட்சி வலய கல்வி பணிப்பாளராக இடம் மாற்றம் பெறவுள்ள சத்தியபாலன் ஆகியோரின் சேவை நலனை பாராட்டி பிரியாவிடை நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பதவி உயர்வு பெறவுள்ள ஜே.பிறட்லி மற்றும் இடமாற்றம் பெற்று செல்லவுள்ள .சத்திய பாலன் ஆகிய இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான கௌரவிப்புக்களும் வழங்கப்பட்டது.

Related posts

‘செல்பி’ முலம் ஊயிரை இழந்த ஓட்டமாவடி என்.எம்.ரியாஸ்

wpengine

உற்பத்தியினை ஊக்குவிக்க நடவடிக்கை வேண்டும் பொது கூட்டத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine

கடமை நேரத்தில் பிரதேச செயலாளருக்கு மாரடைப்பால் பின்பு உயிரிழப்பு

wpengine