பிரதான செய்திகள்

மன்னார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்கள் நியமனம்

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கான கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வழங்கி வைத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு நேற்று (27) மாலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவராக முத்து சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

திருமலையில் நீதி கோரி சவப்பெட்டியுடன் போராட்டம்!

Editor

சிலாவத்துறை கடற்படை விடுவித்த காணியினை மீண்டும் கைப்பற்றிய இராணுவம்

wpengine

மிகப்பெரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ள நவமணிப் பத்திரிக்கை

wpengine