பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்,மடுமாதா தேவாலயம் சென்ற அமைச்சர் ஹக்கீம்

மன்னார் மடுமாதா தேவாலய பிரதான நிர்வாகி எமிலியன்ஸ் பிள்ளை மற்றும் மறை மாவட்ட நிர்வாகிகளின் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்று (14) மடுமாதா தேவாலயத்துக்கு சினேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்­போ­து மடுமாதா தேவாலயத்தில் நிலவும் குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சினைகள் மற்றும் எதிர்­கா­லத்­தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய அபி­வி­ருத்தி திட்­டங்கள் தொடர்­பா­கவும் கலந்து­ரை­யா­டப்­பட்­ட­து. விசேட அமைச்சரவை பத்திரமொன்­றை சமர்ப்பித்து குடி­நீர் பிரச்­சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்­போ­து தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மடுதேவாலய பரிபாலகர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை, குரு முதல்வர் விக்டர் சூசை, முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிப் பாபா பாறுக், ஹுனைஸ் பாரூக் மற்றும் வட மாகாண முகாமைத்துவ பணிப்பாளர் உமர்லெப்பை, பிராந்திய முகாமையாளர் விஜயபாலன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Related posts

பேஸ்புக்கில் அனுப்பிய சிறுவன் பெற்றோரின் ஆபாச படத்தை

wpengine

வவுனியாவில் வீதி விபத்து ! முதியோர் படு காயம்

wpengine

பயங்கரவாதத்தை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் facebooK

wpengine