பிரதான செய்திகள்

மன்னார்,பெரிய மடு பகுதியில் நெல் அறுவடை நிகழ்வு டெனீஸ்வரன்,றிப்ஹான் பங்கேற்பு

மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியமடு கிழக்கு விவசாய அமைப்பினரின் ஏற்பாட்டில் 20-03-2017 திங்கள் காலை 10:30 மணியளவில் பெரியமடு கிழக்கு வயல் அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களும் வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் உத்தியோகபூர்வமாக நெல் அறுவடையை ஆரம்பித்துவைத்தனர், அத்தோடு நிகழ்வின் நிறைவில் பெரியமடு குளத்தினையும் அதனை அண்டிய விவசாய நிலங்களையும் அமைச்சர்களும் அதிகாரிகளும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொள்வனவு செய்யப்பட்ட நெல்லினை சந்தைப்படுத்துவதற்கு தீர்மானம்

wpengine

விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதியரசர் ஸ்ரீபவனை கொண்டுவரும் கூட்டமைப்பு

wpengine

வரலாற்றில் முதல் முறையாக..! முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும்.

Maash