பிரதான செய்திகள்

மன்னார்,நானாட்டான் பகுதியில் விபத்து! பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

மன்னார் – நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று மாலை 3.45 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் நானாட்டான் பகுதியில் நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெக்ஸ் கமில்டன் என்ற 27 வயது பல்கலைக்கழக மாணவரே உயிரிழந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இதில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீள்குடியேற்ற செயலணி ஊடாக இடம்பெயர்ந்தோர்,பாதிக்கப்பட்டோர் தகவல் திரட்டல்

wpengine

மன்னாரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்! இருவர் கைது

wpengine

யூ டியூப் பார்த்து விமானம் தயாரித்த அதிசயம்

wpengine