பிரதான செய்திகள்

மன்னார்,எருக்கலம்பிட்டியில் 2கோடி கேரள கஞ்சா

மன்னார் எருக்கலம்பிட்டி பஸ் தரிப்பிட நிலையத்தில் வைத்து சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நவரத்தினவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கஞ்சா கடத்தல் காரனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சிரந்த பீரிஸ் , உதவி பொலிஸ் அத்தியட்சகர் எதிரிசிங்க ஆகியோரின் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் மன்னார் எருக்கலம்பிட்டி பஸ் தரிப்பிட நிலையத்தில் வைத்து குறித்த கேரள கஞ்சா பொதியை கைப்பற்றியதோடு, அநுராதபுரம் தமுத்தே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

2 கிலோ 55 கிராம் எடை கொண்ட குறித்த கஞ்சாப்பொதி சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் இருந்து அநுராதபுரம் தலாவ என்னும் பிரதேசத்திற்கு கொண்டு செல்ல இருந்த நிலையிலே குறித்த கஞ்சாப்பொதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றார். விசாரணைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹக்கீம் மடையனாகி விட்டோம்.படுகுழியில் விழுந்து விட்டோம் என கூறுவது வழமையானதொன்று.

wpengine

ஒரே வகையான அரிசிக்கு இரண்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டது ஏன்? தகவல் திணைக்கள ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் விளக்கம்

wpengine

ஹக்கீம்,ஹசன் அலி கம்பாட்டம் கலைக்கப்பட்டதா?

wpengine