அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னாருக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய..!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (12) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்து இன்றைய தினம் சனிக்கிழமை(12) மதியம் நானாட்டான் பிரதான மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம் பெற்றது.

இந்த கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மா.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து உரை நிகழ்த்தினர்.

மேலும், இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமரின் நானாட்டான் பகுதிக்கான விஜயத்தையொட்டி நானாட்டான் பகுதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் றிஷாட்டை பற்றி போலியான செய்திகளை வெளியிடும் “தமிழ்வின்” செய்தி தளம்! கூர்மையான ஆயும் எதுவுமில்லை

wpengine

இந்தியா 1பில்லியன் டொலர் கடன்! மருந்துக்கள் இறக்குமதி

wpengine

இஸ்லாத்திற்கு மாறிய ஷப்னம் பேகத்திற்கு நடைபெற்ற சோகம்

wpengine