மன்னாரில் 5 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னார், பரப்பாங்கண்டல் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கேரள கஞ்சா தொகையொன்றை கடத்திய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மன்னார் முகாம் அதிகாரிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 5 கிலோ 252 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 33 வயதுடைய யாழ்ப்பாணம், சுழிபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares