பிரதான செய்திகள்

மன்னாரில் மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய்

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதி, மாந்தை சந்தியில் வைத்து கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு நேற்று இரவு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

வாகனத்தில் மீன் ஏற்றிச் செல்லும் விதத்தில் றெஜிபோம் பெட்டிகளில் மறைத்து வைத்துக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலே 200 கிலோ 165 கிராம் எடை கொண்ட குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியுடையவை எனத் தெரியவருகின்றது.

இதன்போது நானாட்டான் மற்றும் பேசாலையைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் வாகனம் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Related posts

இம்தியாஸ் பாக்கீா் மாக்காாின் ”இதயம் பேசுகிறது” வெளியீட்டு விழா

wpengine

இஸ்லாமிய ஆண்களுக்கு ஏன் நான்கு திருமணம் அவசியம்.

wpengine

தலைமன்னார் உருமலை பகுதியில் போதைப்பொருள்

wpengine