மன்னாரில் மக்கள் பொருட்கொள்வனவில் ஆர்வமுடன் ஈடுபட்டிருக்கவில்லை

மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தபட்டுள்ள போதும் மக்கள் பொருட்கொள்வனவில் ஆர்வமுடன் ஈடுபட்டிருக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


இன்றைய தினத்தில் மன்னார் நகர் பகுதிக்கு அதிக அளவான மக்கள் வருகை தந்துள்ளதாகவும், என்ற போதும் அவர்கள் பொருட்கள் கொள்வனவில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை வங்கிகள் போன்றவற்றிக்கு அதிகமாக மக்கள் சென்றுள்ளதுடன் நோன்பு காலம் என்பதினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் தமது நோன்பு கடமைகளுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.


மேலும் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியுள்ளதுடன், நகரின் ஏனைய பகுதிகளில் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares