பிரதான செய்திகள்விளையாட்டு

மன்னாரில் பூபந்தாட்டம் ஆரம்பம்

உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஏற்பாட்டில் இலங்கையின்  4 ஆவது பூப்பந்தாட்டப்   போட்டி  இன்று  காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.

 

இன்று ஆரம்பமான இப்போட்டியானது   எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை  இடம் பெறவுள்ளது.

இப்போட்டியின்  ஆரம்ப நிகழ்வில்  பிரதம விருந்தினராக வடமாகண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், கௌரவ விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும்  ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உற்பட உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

பூப்பந்தாட்டப்  போட்டியினை வடமாகண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வைபவ ரீதியாக ஆராம்பித்து வைத்தார்.

 

இப்  போட்டியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

 

Related posts

திறைசேரிக்குத் பணங்களை திருப்பும் அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டும்

wpengine

அரசியலமைப்பினை பயன்படுத்தி யாரும் காற்பந்து விளையாட முடியாது.

wpengine

மன்னாரில் பண்டிகை கால வியாபாரம்!வெளிமாவட்டம் தடை

wpengine