மன்னாரில் புரெவி தாக்கம்!மாந்தை மேற்கு பகுதியில் கால்நடை பாதிப்பு

புரெவி புயல் காரணமாக பெய்த கடும் மழையால் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பெரியமடு குளப் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற அதிகளவான கால் நடைகள் பலியாகியுள்ளதுடன், பல கால்நடைகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மன்னார் – பெரியமடு குளத்தை அண்டிய பகுதியில் மேய்ச்சலுக்காக சென்ற நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட காற்றுடன் கூடிய தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் அதிக அளவான மாடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதுடன் சில மாடுகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.


குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து பெரிய மடுப் பகுதியில் காணாமல்போன கால் நடைகளை மீட்கும் பணிகள் கடற்படை, இரணுவம் மற்றும் பொது மக்களின் பக்களிப்புடன் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது அதிகமான மாடுகள் உயிரிழந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் ஏனைய காணாமல்போன மாடுகளை மீட்கும் பணியில் கடற்படை மற்றும் மாவட்ட பிரதேச செயலகக அதிகாரிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares