மன்னாரில் பண்டிகை கால வியாபாரம்!வெளிமாவட்டம் தடை

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து இம்முறை பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னாரிற்கு வரும் வியாபாரிகளின் பண்டிகைக் கால வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.


இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது. இதனால் நாட்டின் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.


ஒவ்வொரு வருடமும் மன்னார் மாவட்டத்தில் நத்தார், புதுவருட பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் மன்னார் நகர சபை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவது வழமை.
குறித்த வியாபார நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் தென்பகுதி வியாபாரிகள் மன்னாரிற்கு வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது வழமை.
ஆனால் இந்த முறை தென்பகுதி வியாபாரிகள் மன்னாரிற்கு வந்து பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் நகர சபை தடை விதித்துள்ளது.


எனவே இம்முறை பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தென்பகுதி வியாபாரிகள் மன்னாரிற்கு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எனினும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் உள்ளூர் வியாபாரிகளுக்கு மாத்திரம் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் நகர சபை உரிய அனுமதியை வழங்கும்.


புதிதாக எந்த வியாபாரிகளுக்கும் பண்டிகைககால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது.


எனவே தென்பகுதி வியாபாரிகள் இம்முறை மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் தாக்கம் முழுமையாக நீங்கிய பின்னர் எதிர்வரும் காலங்களில் பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளை மன்னார் நகரசபை பிரிவில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares