பிரதான செய்திகள்

மன்னாரில் நீர் தடை

(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

மன்னார் பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் விநியோகம், இன்று தடைப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மன்னார் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதாரத் திட்டத்துக்கு அமைவாக, மன்னார் பிரதேசத்தில் பிரதான நீர் விநியோகக் குழாய்களின் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள், மேற்கொள்ளப்படவுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 8 மணி தொடக்கம் மாலை  5 மணி வரை நீர் துண்டிப்பு அமுலில் இருக்கும் என, மன்னார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related posts

பெரமுன கட்சியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அல்ல

wpengine

அமைச்சரவை மாற்றத்திற்கான பணிகள் நிறைவு

wpengine

மன்னார்,எழுத்தூர் சந்தியில் கேரள கஞ்சா

wpengine