பிரதான செய்திகள்

மன்னாரில் சோதனைக்கு முன்பு பாடசாலை திறப்பு

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து தரம் 06 முதல் உயர் தரம் வரையிலான மாணவர்களுக்கு இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னாரில் பாடசாலைகள் முழுமையாக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்,

பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் புத்தகப்பை கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாடசாலைகளுக்குள் மாணவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் பாடசாலைகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், இன்றைய தினம் மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்களின் வரவு மிக குறைவடைந்த நிலையில் காணப்படுகிறது.

மன்னாரில் பாடசாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்த பொலிஸார் தடை விதித்துள்ளதோடு, மாணவர்களை பெற்றோர் அழைத்து வந்து விடுவதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

Related posts

அமைச்சுப் பதவியினை பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

wpengine

நானாட்டன் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்த விளையாட்டு கழகங்கள்

wpengine

பாத யாத்திரை: எதைப்பிடுங்கப் போகிறது

wpengine