மன்னாரில் காற்றாலை,மண் அகழ்வு அரச அதிகாரிகள்,அரசியல்வாதிகள் மௌனம்! பிரஜைகள் குழு விசனம்

மன்னாரில் இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயுவதற்கான   கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் நேற்று(23) இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலின் போது, மன்னார் மாவட்டத்தில் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. 

இதன்போது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கனிய மணல் அகழ்வு மற்றும், காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை(29) மாவட்ட ரீதியில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு, மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ரீதியாக விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும், காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படாது விட்டால் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் இவ்விடயம் குறித்து மௌனம் காத்து வருகின்றனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொறியியலாளர் சங்க பிரதிநிதிகள், கடற்தொழில் அமைப்பு மற்றும் மத தலைவர்கள் உட்பட பலர் இக் கலந்துரையாடலில் பங்குப்பற்றியுள்ளனர். 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares