பிரதான செய்திகள்

மன்னாரில் ஒன்பது கைக்குண்டுகள் மீட்பு!

மன்னார் – அடம்பன் பெரியமடு பிரதேசத்தில் 9 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அடம்பன் பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,

இந்த குண்டுகளானது யுத்த காலத்தில் புலிகள் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடம்பன் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பெரியமடு – முஸ்லிம் கிராமத்திற்கு அருகில் வைத்து குறித்த குண்டுகளை மீட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பிரதேசத்திலிருந்து புலிகள் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட ராகவன் என்ற பெயர் பொதித்த கைக்குண்டுகள் உள்ளிட்ட 9 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சமனலவௌ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் வழங்க அமைச்சரவை அனுமதி! 

Editor

கஞ்சா கணவனை மீட்க லஞ்சம் வழங்கிய மனைவி கைது

wpengine

அமைச்சர் றிஷாட்டை சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம் சிங்கள அரசியல்வாதி

wpengine