மன்னாரில் உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர் காலம்’ திட்டம்

மன்னார் மாவட்ட வீடமைப்பு குழு கூட்டம் நேற்று மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.


இது தொடர்பில் மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் நோயல் ஜெயச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்,


குறித்த கூட்டமானது இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ‘உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர் காலம்’ என்ற வேளைத்திட்டத்திட்டத்திற்கு அமைவாக ஒரு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு வீடு என்ற அடிப்படையில் 153 வீடுகள் அமைக்கப்பட உள்ளது.


அதன் அடிப்படையில்,இவ்வருடம் 90 வீடுகள் அமைக்கப்பட உள்ளது.ஒரு வீடு அமைக்க 6 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.


தற்போது 45 வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அவற்றில் 15 வீடுகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.


மிகுதி வீடுகளை பூர்த்தி செய்ய தலைமையக அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மிகுதி வீடுகளை அமைப்பதற்கான தெரிவுகள் ஒரு வாரத்தில் மேற்கொள்ள முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த கூட்டத்தின் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பதில் அரசாங்க அதிபர் தலைமையில் தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக அறிவித்தல்கள் வழங்கப்பட்டது. ஒரு வாரத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு 49 பயனாளிகள் தெரிவு மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள், மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares