பிரதான செய்திகள்

மன்னாரில் “இணைந்த கரங்கள்” அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இணைந்த கரங்கள் அமைப்பின் பங்களிப்போடு மன்னார் மாவட்டத்தில் உள்ள பூமலர்ந்தான் பாடசாலையில் கல்வி கற்கும் தாய் தந்தையை இழந்த மற்றும் அதி கஸ்டத்தில் உள்ள சில மாணவர்களுக்கு “இணைந்த கரங்கள்” அமைப்பின் உறவுகளினால் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் பூமலர்ந்தான் ஆரம்ப பாடசாலையின் அதிபர் மரிசால் விக்டர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இணைந்த கரங்கள் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.

Related posts

கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் 400 கி.மீ அதிகமாகப் பறந்த நெதன்யாகு..!

Maash

இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை

wpengine

வடக்கு, கிழக்கிலுள்ள காணிப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்-அமைச்சர் ஹக்கீம்

wpengine