பிரதான செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கூட்டமைப்பின் கூட்டம்! விக்னேஸ்வரன் பகிஷ்கரிப்பு

மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களின் பணிப்புரைக்கு அமைய வட, கிழக்கு சமகால அரசியல் தொடர்பான விசேட கூட்டம் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த கூட்டமானது, மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் மன்னார் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவரும், மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றிய அமைப்பாளருமான திரு.கெனடி அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சற்று முன்னர் ஆரம்பமான இந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், டெலோவின் செயலாளர் நாயகம் சிறீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த அருட் தந்தையர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத் தொடரானது, மன்னார் ஆயர் இல்லத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்ப்பாணத்தில் 50 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி மஹிந்த

wpengine

மன்னார் நகர பிரதேச மட்ட விளையாட்டு போட்டி (படம்)

wpengine

பெண்கள் வாட்ஸ்அப் தொல்லையிலிருந்து தப்பிக்க 5 டிப்ஸ்!

wpengine