பிரதான செய்திகள்

மன்னாரிலும் ,நாவலப்பிட்டியிலும் ஆட்டோ திடீர் தீ

கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் இன்று (16) காலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று, கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.

அப்போது முச்சக்கரவண்டியில் பயணித்த ஓட்டுனர் மற்றும் குழந்தை உள்ளிட்ட 5 பேரும் எவ்வித தீக்காயங்களும் இன்றி உயிர்தப்பியதாக  தெரிவிக்கின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இளைஞர் ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டி ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் திடீர் என தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (16) காலை 10.15 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றார்.

முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கே தீ விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் குறித்த பாதையூடாக நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. எனினும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து வீதி ஒழுங்குகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பனாமாவில் பெயர் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல: பாட்டலி

wpengine

மன்னார் மடுவில் மரகடத்தல் வியாபாரம்

wpengine

ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு!

Editor