பிரதான செய்திகள்

மனோவின் 20 வருடகாலமாக அரசியலில் மலையக மக்களை மீண்டும் ஏமாற்ற இந்த நாகடகமா?

மின்னல் நிகழ்ச்சி ஒன்றில் முன்னால் அமைச்சர் அதாவுல்லாஹ் பேசும் போது வாய்தவறி ஒரு வார்த்தை பிரயோகம் ஒன்றை பாவித்துவிட்டார்.

அதனை வைத்துக்கொண்டு மலைய மக்கள் மீது பாசம் கொண்டவர் போன்று மனோ நீலக்கண்ணீர் வடிக்கின்றார்.

கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து மாநகர சபை உறுப்பினர்,மாகாண சபை உறுப்பினர்,பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்த நல்லாட்சியில் அமைச்சராகவும் இருந்த அரசியல் வரலாற்றை யாரூம் மறந்துவிட முடியாது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து மனோ மீண்டும் அப்பாவி மலையக மக்களை ஏமாற்றும் நோக்குடன் இந்த அரசியல் நாடகத்தை அரங்கேற்ற இருப்பதை மலையக மக்கள் அறிந்திருப்பார்கள்.

மலைய மக்களின் ஆயிரக்கணக்கான பிரச்சினையில் எத்தனை பிரச்சினைகளை இந்த மனோ தீர்த்துவைத்துள்ளார்?

கொழும்பில் சுகபோகமாக வாழும் இந்த மனோவின் அடுத்த தேர்தல் உத்தியாக இந்த மின்னல் நிகழ்சியினை வைத்துக்கொண்டு மலைய மக்களை ஏமாற்றுவார் என்பதை யாரூம் மறந்துவிட வேண்டாம்.

ரணில் அரசில் செல்லபிள்ளையான இருந்த மனோ ஏன் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கவில்லை?

Related posts

20வது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை- மஹிந்த

wpengine

65 ஆயிரம் விட்டு திட்டம் பிரான்ஸ் நிறுவனத்திடம் – அமைச்சர் டி எம் சுவாமிநாதன்

wpengine

“சகல மாணவர்களுக்கும் உயர்தரம் பிழையான முடிவு”

wpengine