பிரதான செய்திகள்

மனிதர்களை பழிவாங்கும் அரசாங்கம் மஹிந்த

இந்த அரசாங்கத்துக்கு மனிதர்களைப் பழிவாங்குவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தெரியாது என்பதையே பொருளாதார வீழ்ச்சி நிலை எடுத்துக் காட்டுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது ஆட்சிக் காலத்தில், யுத்தம் இருந்த காலப்பகுதியிலாவது இவ்வாறு ரூபாவின் பெறுமதி குறைவதற்கு நாம் இடமளிக்கவில்லை.

இந்த அரசாங்கம் பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டு வேறு விடயங்களில் கவனம் செலுத்துவதனால், ரூபாவைக் காப்பாற்றத் தவறியுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் கடன் சுமையை மாத்திரம் தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

பாடசாலை மாணவர்களின் இலவச சீருடைத் துணி விநியோகம் 80% நிறைவு!

Editor

65 ஆயிரம் வீடுகள் திட்டத்துக்கு தடங்கல் இல்லை: அமைச்சர் சுவாமிநாதன்

wpengine

இதுவரை ஐந்து லச்சத்து 37ஆயிரம் ரோஹிங்கியர் வெளியேற்றம்.

wpengine