மதுபோதையில் வாகனம் செலுத்திய 688 சாரதிகள் கைது

கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய 688 சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களின் சாரதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 10 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும்
விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம், நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 215 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களில் கைது செய்யப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் என்பதுடன், 380 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இந்த காலப்பகுதியில் 219 முச்சக்கரவண்டி சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares