பிரதான செய்திகள்

மதுபானசாலையை அகற்றுவதற்கு வவுனியா நகரசபையில் ஏகமனதாக தீர்மானம்.

வவுனியா, புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றுவதற்கு வவுனியா நகரசபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், கட்டிட உரிமையாளருக்கும் நகரபிதா கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபையின் அமர்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் த. பரதலிங்கம், மதுபான நிலையம் தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததுள்ளார்.

அத்துடன் நகரசபையால் அனுமதி எதுவும் கொடுக்கபட்டதா என வினவியதுடன் அதனை அகற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்பொழுது நகரபிதா இ.கெளதமன், குறித்த மதுபானசாலை அகற்ற சபை ஓர் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறித்த மதுபானசாலை அமைந்துள்ள கட்டிடத்தில், மதுபானசாலைக்கு மேல் உள்ள பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கும் குறித்த கட்டிட உரிமையாளரால் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடானது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்பதுடன் எமது சமூகத்தை சீரழிக்கும் செயல்பாடாகவே தெரிகிறது.

இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மதுபானசாலை அகற்றபட வேண்டும் என்ற பரதலிங்கத்தினால் தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் மக்கள் குறைகேட்கும் 13 வது வீதிக்கொரு நாள்

wpengine

வவுனியாவில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட இருவர் மீது வாள்வெட்டு!

Editor

மஹிந்த மூன்றில் இரண்டு பலத்தை பெற்றுக்கொள்ள முயற்சி ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை

wpengine