பிரதான செய்திகள்

மண் அகழ்வில் வடக்கு மாகாணத்தில் அதிகமான மோசடிகள்

மணல் அகழ்வுப் போக்குரத்துகளுக்கான அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டதை அடுத்து வடக்கு மாகாணத்தில் அதிகமான மோசடிகள் இடம்பெற்று வருவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.


வடக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது மணல் அகழ்வுகள் அதிகமாக இடம்பெற்று வருவதாகவும், அவற்றில் பல சட்டவிரோத செயற்பாடுகளும் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாளுக்கு மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட லொறிகள் மற்றும் உழவு இயந்திரங்களில் மணல் அகழ்வுகள் இடம்பெறுவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாணம், கிளாலி, அள்ளிப்பளை, பளை, புலோலி, இயக்கச்சி, மந்துவில், மண்டுவில், சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களில் தற்போது தனியார் காணிகளில் துரிதகதியில் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றாலும், அவற்றிலும் சில சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எல்லையற்ற மணல் அகழ்வினால் சூழலுக்குப் பாரிய பாதிப்பு ஏற்படுவதோடு சட்டவிரோத செயற்பாடுகளும் இடம்பெறுவதால் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

டெங்கு ஒழிப்பு சிறமதானத்தில் ஈடுபட்ட மன்னார் நகர பிரதேச செயலக ஊழியர்கள்

wpengine

ராஜாங்க அமைச்சர் பதவியை எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு

wpengine

றிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

wpengine