மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு சீமெந்து-ஹிஸ்புல்லாஹ்

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாடு பூராவும் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு சீமேந்து வழங்கும் திட்டம்  நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் 3ஆயிரம் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக சீமெந்து வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கு அமைய, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரைக்கு அமைய ‘நாடு பூராவும் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு சீமெந்து வழங்கும் திட்டம்’ முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வருமையான மக்கள் அதிகளவு  வாழும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அம் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஏம்.எல்.ஏ.எம்.  ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் 3ஆயிரம் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக  சீமெந்து வழங்கப்படவுள்ளது. இதற்குத்தகுதியான பயனாளிகள் பிரேதச செயலக மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட குழு மூலம் தெரிவுசெய்யப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares