பிரதான செய்திகள்

மட்டக்களப்பு பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு-22 திகதி ஏறாவூர்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
றாபிதது அஹ்லிஸ் ஸூன்னாவின் மட்டக்களப்பு பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு எதிர்வரும் 22-04-2016 திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை மட்டக்களப்பு –ஏறாவூர் அல் மர்கஸூல் இஸ்லாமியின் இஸ்லாமிய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி ‘ஈமானிய எழுச்சி மாநாட்டில் ஈமான் கொண்டவர்களே ஈமான் கொள்ளுங்கள்’ , ‘இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள்’ , ‘ஊடகங்கள் ஒழுக்கத்திற்கு ஒரு சவால்’ , ‘பொருளீட்டலில் இஸ்லாமிய வழிகாட்டல்’, ‘சமகால அரபுலகு ஒரு சமநிலைப் பார்வை’ போன்ற பல சமூக மற்றும் சமயசார் தலைப்புகளில் பிரபலமிக்க உலமாக்களினால் விஷேட சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படவுள்ளது.

இம் மாநாட்டில் கலந்து கொண்டு ஈமானிய அறிவும்,உணர்வும் பெற வருமாரு றாபிதது அஹ்லிஸ் ஸூன்னாவின் மட்டக்களப்பு பிராந்திய கிளை வேண்டுகொள் விடுத்துள்ளது.

Related posts

வித்தியா வழக்கில், மரண தண்டனைக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் திகதி விதித்துள்ளது.

Maash

நிவாரணப் பொதியை லங்கா சதொச நிறுவனத்தில் இருந்து 3998 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும்.

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor