பிரதான செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர்களுக்கு T shirt வழங்கிய அமீர் அலி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான T shirt வழங்கும் நிகழ்வு 03.07.2020 காவத்தமுனை முகைதீன் ஹாஜி அவர்களின் அரிசி ஆலை வளாகத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் அமீர் அலி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.


இந்நிகழ்வுக்கு விசேஷட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் கலந்து விசேட உரையாற்றினார்.


இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் ஆசிரியர், நெளபர்,ஜெளபர் , சட்டத்தரணி ராசிக், வைத்தியர் அப்தாப் அலி,  இணைப்பாளர்  மீரான் ஹாஜி,  தன்சீல் மெளலவி, வட்டாரக் குழு தலைவர்களான நாஸர், பாறூக், றியாஸ் , மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.


முதலாவது நிகழ்வாக காவத்தமுனை, தியாவட்டவான், பாலைநகர் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Editor

பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகள் ஏப்ரல் 17இல் மீள ஆரம்பம்!

Editor

ஹலால் சான்றிதழ்கள் இலங்கைக்கு பாரிய நன்மைகள்

wpengine