பிரதான செய்திகள்

மட்டக்களப்பு,மீராவோடை பாடசாலை கட்ட திறப்பு விழா

(அனா)
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட மீராவோடை உதுமான் வித்தியாலத்திற்கான வகுப்பறைக் கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று   வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.வி.முபாறக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம்.ஜுனைட், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்குடா கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.இஸ்மாயில், மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் தலைவரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தலைவருமான கே.பி.எஸ்.ஹமீட், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.ஜாபிர் கரீம், பிரதேச பாடசாலை அதிபர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையின் வேண்டுகோளின் பேரில் இலங்கைக்காக சவூதி தூதுவராலயத்தின் இருப்பத்தி எட்டரை இலட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்பில் வகுப்பறைக் கட்டடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையில் கல்வி பயிலும் சில மாணவர்கள் தற்காலிக கொட்டில்களில் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை, வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில்.

Maash

ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் தொடர்கிறது; இதுவரை 05 பேர் பலி

wpengine

மனிதநேயமிக்க அரசியல் வாதிதான் இந்த பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine