செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் நண்பர்களுக்கு இடையே ஏற்பபட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு . .!

குறித்த சம்பவம் நேற்று (14) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய புவனேந்திரராசா என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபர் சம்பவதினமான நேற்று (14) பகல் 12 மணியளவில் அவருடைய மூன்று நண்பர்களுடன் சின்னவத்தை பகுதியிலுள்ள வயல்பகுதிக்கு சென்று ஒன்றாக இருந்து மதுபானம் அருந்தியுள்ளார்.

இதன்போது, குறித்த உயிரிழந்த நண்பருக்கும் ஏனைய மூன்று நண்பர்களுக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த நபர் அவரின் மூன்று நண்பர்களால் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து மூவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதன்பின், அந்த வயல்பகுதிக்கு மாலை ஆவளை சென்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர், அங்கு சடலம் ஒன்று இருப்பதை கண்டு காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

பின்பு, குறித்த நண்பரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் பெயரில் மூன்று நண்பர்களையும் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்வர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரை சந்தித்த சாள்ஸ் நிர்மலநாதன்

wpengine

“வரலாற்றில் இத்தனைகாலம் நமது சமூகம் எதிர்கொண்டிராத ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் இப்போது சந்திக்கின்றது.

wpengine

மன்னார் நகர சபை ஊழியரின் அசமந்தபோக்கு! இரானுவ சாவடி சேதம்

wpengine