பிரதான செய்திகள்

மடு பிரதேச செயலாளர் பிரிவில் மான் வேட்டை

மடு பிரதேச செயலாளர் பிரிவில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வேட்டையாடப்பட்ட சுமார் 50 கிலோ மதிப்புள்ள மான் ஒன்றும் இன்று காலை மடு வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலம்பிட்டி-பறங்கியாறு பகுதியில் நேற்று காலை மான் வேட்டையில் ஈடுபட்ட போதே மடு வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இதன் போது குறித்த நபரிடம் இருந்து சுமார் 50 கிலோ எடை கொண்ட வேட்டையாடப்பட்ட மானும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த நபரை மடு சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மடு வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நுவரெலியா பயணம்! குடும்பத்தை துன்பத்தில் ஆழ்த்திய முகநூல் “செல்பி”

wpengine

சமூக வலைத்தளம் ஊடான பதிவு பதற்ற நிலைக்கு காரணம்

wpengine

உப்பாற்றுப்பகுதியில் வாழும் மக்களின் மீன்பிடி,விவசாய செய்கை மறுக்கப்படுகின்றது அமைச்சர் றிஷாட்! ஜயவிக்ரம அமைச்சரிடம்

wpengine