செய்திகள்பிரதான செய்திகள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு 6 பேர் கைது .!

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு அங்கு சேவையாற்றிய நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா -கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த சமூகப் பிறழ்வான விடுதி ஒன்றை செவ்வாய்க்கிழமை (11) பொலிஸார் முற்றுகையிட்டு அங்கிருந்த நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுர்வேத ஸ்பா நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் செயற்பாடுகள் நடைபெறுவதாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நுவரெலியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு திடீர் என சோதனையிட்டு குறித்த மசாஜ் நிலையம் சுற்றி வளைக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 21,25,34 மற்றும் 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் வெளிமடை, இரத்தினபுரி. கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதில் விபச்சார விடுதி நிர்வாகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் தடுத்து வைக்கப்பட்டு தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பிரிட்டன் நாட்டின் வெளியேற்றம்! இஸ்லாமிய சபை கண்டனம்

wpengine

சட்டவிரோத வாகன இறக்குமதி : சுங்க அதிகாரி உடந்தை

wpengine

படையினர் 40 ஆயிரம் பேரை கொலை செய்தனர் என்றால், பெயர் பட்டியல் எங்கே?

Maash