பிரதான செய்திகள்

மங்கள சமரவீரவின் அகால மரணம் எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும்- ரணில் கவலை

மங்கள சமரவீரவின் அகால மரணம் தேசத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இந்த நிலையில் மங்கள சமரவீரவின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அனுதாப செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

குறித்த அனுதாபச் செய்தியில்,

நான் அவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்தபோது, ​​ குணமடையும் வரை நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அது நடக்கவில்லை. இன்று காலையில் கொரோனா வைரஸ் அவரது உயிரை  பலியெடுத்துவிட்டது.

மங்கள ஒரு முக்கியமான அரசியல் நபராக இருந்தார். அவர் இலங்கையில் நம்பகமான மற்றும் நிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார், அனைவருக்குமான சுதந்திரம் மற்றும் சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிட்டார்.

அவர் புதுமையான யோசனைகளைக் கொண்டு வந்தவர். மங்கள ஒரு சிறந்த தொடர்பாளராக இருந்தார்.  2015 முதல் 2019 வரை அமைச்சரவையில், அவர் வெளியுறவு மற்றும் நிதி விவகாரங்களை மிகவும் திறமையாக நிர்வகித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

புத்தளம் குப்பை விவகாரத்தில் அமைச்சரவையில் சம்பிக்கவுடன் குழப்படி செய்த அமைச்சர் றிஷாத்

wpengine

மத்திய வங்கிச் சட்டமூல 2ம் வாசிப்பு விவாதம் மே 11இல்!

Editor

வவுனியாவில் புகைப்பரிசோதனை பத்திரம் காண்பிக்கத்தவறினால் தண்டனை

wpengine