மக்கள் சந்தா பணத்தில் மன்னார் மாவட்ட கமநல உதவி ஆணையாளருக்கு பிரியா விடை! அமைப்புக்கள் விசனம்

மன்னார் மாவட்ட கமநல உதவி ஆணையாளருக்கு பிரியாவிடை நிகழ்வு ஒன்று பெற்கேணி கமநல திணைக்களத்தில் விரைவில் நடைபெற இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இந்த பிரியாவிடை நிகழ்வுக்கான பணங்களை சேமிக்கும் நடவடிக்கையில் பெற்கேணி கமநல திணைக்களத்தில் விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


அதற்கான செலவுகளை மேற்கொள்ள அப்பாவி விவசாயிகளின் மாதாந்தம் வழங்கப்படும் சந்தா பணத்தை பயன்படுத்தவுள்ளார்கள்.


முசலி பிரதேசத்தில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளிடம் சுமார் 10000 ரூபா தொடக்கம் 5000  ரூபா பணங்களை பலவந்தமான முறையில் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் அறியமுடிகின்றன.


இதே போன்று கடந்த வருடங்களில் கூட அப்பாவி விவசாயிகளின் பணங்களை விவசாய அமைப்புகளில் இருந்து பல முறை பெரிய பெரிய சாப்பாடு வசதிகளையும் மேற்கொண்டுள்ளார்கள்.


அதே போன்று மன்னார் கமநல திணைக்களத்தில் வேலை செய்து இளைப்பாறிய அதிகாரிகளுக்கு விவசாயிகளின் பணங்களை பயன்படுத்தி தங்க ஆபகரணங்களை கூட வழங்கி இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்கள்.


இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி அப்பாவி விவசாயிகளின் பணங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முசலி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares