மக்கள் ஆணையை வெற்றிபெற செய்வது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை

மக்கள் ஆணையை வெற்றிபெற செய்வது தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டமை இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.


மக்களின் ஆணையை செயற்படுத்தவதற்கு நாடாளுமன்றத் தேர்தலை கூடிய சீக்கிரம் நடாத்துதவற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.


தேர்தல் நடத்தப்படுவதனை முடிந்தளவு காலம் தாழ்த்துவதற்கு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் சிலர் முயற்சித்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares