மக்களின் அதிருப்திக்கு உள்ளான உறுப்பினர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வேட்பு மனு வழங்கப்படாது

மக்களின் அதிருப்திக்கு உள்ளான உறுப்பினர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வேட்பு மனு வழங்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha) தெரிவித்துள்ளார்.

ஞாயிறு சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.  

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் விசாரணை நடாத்தப்படுவதாகவும் பிரதமர்  குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares