பிரதான செய்திகள்

மகிந்த ஆதரவு அணியினரின் முக்கிய சந்திப்பு விரைவில்

ஒன்றிணைந்த எதிர்கட்சி என்று தங்களை அடையாளப்படுத்தும் மகிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற அணியினர் இந்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.

அவர்கள் தரப்பு சிரேஷ்ட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேதின கூட்டத்துக்கு புறம்பாக, கிருலப்பனையில் மகிந்த ஆதரவு பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.

இதில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்கும் வகையில் இந்த கூட்டம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மே தின பேரணிக்கான கொள்கையும், மகிந்த அணியினரின் பேரணிக்கான தொனிப்பொருளும் ஆராயப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த பேரணியில் மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“மைலோவில்” அதிக சீனி மட்டம்! ஜனாதிபதி தெரிவிப்பு

wpengine

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக…!

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் நீடிக்க வேண்டும்

wpengine