பிரதான செய்திகள்

மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டி அவசியம் இல்லை

மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டி அவசியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.


மகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையையும் தான் வெளியிடாததால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஒருபோதும் மகா சங்கத்தை அவமதிக்கும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. நான் கூறியது என்னவென்றால், ஒரு சில துறவிகள் மட்டுமே இரத்தத்திற்காக கத்துகிறார்கள், இந்த துறவிகளில் 90 சதவீதம் பேர் தலைமை துறவிகளால் வழி நடத்தப்படுகிறார்கள் என்றுதான்.

எனினும் நான் கூறிய கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எனது அறிக்கையை அதன் உள்ளடக்கத்தை சிதைத்து திரிபுபடுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

சஜித் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் நியமனம்

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் இந்துகோவில்கள்,கிறிஷ்தவ சபை மற்றும் விகாரைகளுக்கு நிதி ஒதுக்கீடு

wpengine

Dematagoda Kahiriya Girl School 4 floors building opend ZAM REFAI Haj

wpengine