மகளிர் தினத்தையொட்டி விதவைகளுக்கு இலவச ஹெலிகாப்டர் பயணம்

உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. மும்பையில் கணவனை இழந்த பெண்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் ஹெலிகாப்டரில் இலவச பயணம் செய்யும் வசதியை சிவசக்தி மகளிர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாக சர்வதேச மகளிர் தினத்தை சிவசக்தி மகளிர் சங்கம் வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகின்றது. அந்தவகையில் இந்தாண்டு கணவனை இழந்த பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்காக இன்று ஒரு நாள் மட்டும் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணம் செய்யும் வசதியை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று காலை 11 மணி முதல் 2 மணி வரை இலவச ஹெலிகாப்டர் பயணம் செயல்படுகிறது. இதில் பயணம் செய்ய 21-க்கும் அதிகமான விதவைப் பெண்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

மேலும், இன்று மாலை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தங்களது வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களை விளக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares