செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

மகளிர் தினத்தன்றில் வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் போராட்டம், ஆதரவு வழங்குமாறு கோரிக்கை.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த நாள் முதல் தமது உறவுகளை தேடி 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், 

2923 நாட்களை பூர்த்தி செய்கின்ற மார்ச் எட்டு சர்வதேச மகளிர் தினத்தன்றில் சர்வதேச நீதியை வலியுறுத்தி வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம்தெரிவித்துள்ளனர் 

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர் 

இதன்போது கருத்து தெரிவித்தவர்கள்,

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த நாள் முதல் தமது உறவுகளை தேடி 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் இந்த போராட்டம் எதிர் வருகின்ற மார்ச் சர்வதேச மகளிர் தினமான அன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாவது ஆண்டில் தொடர் போராட்டமாக தொடர்ந்து வருகின்றது. 

இந்நிலையில் 2923 நாட்களை பூர்த்தி செய்கின்ற அந்த மார்ச் எட்டு சர்வதேச மகளிர் தினத்தன்றில் முல்லைதீவில் தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராடத்தை மேற்கொண்டு வரும் தாம் சர்வதேச நீதியை வலியுறுத்தி வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் 

தமது போராட்டத்திற்கு எந்த ஒரு அரசாங்கமும் தீர்வுகளை வழங்காத போது இந்த அரசாங்கமும் அதற்கான தீர்வை வழங்காத நிலையிலே சர்வதேசத்தினுடைய தீர்ப்பை  எதிர்பார்த்தவர்களாக தமது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும்,

எனவே இந்த அரசாங்கம் ஆட்சி பொறுப்பெடுத்ததன் பின்னர் தாங்கள் செய்கின்ற மாபெரும் போராட்டமாக இந்த போராட்டம் இடம்பெற இருப்பதினால் மத தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரையும் தமது போராட்டத்திற்கு வருகை தந்து ஆதரவளித்து தமது உறவுகளுக்கான நீதியை பெற்றுத்தர அனைவரும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்

Related posts

யாழ் மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றவர்களுக்கு 5000ரூபா கொடுப்பனவு

wpengine

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது . !

Maash

மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் இருவர்

wpengine