பௌத்த மதத்துக்கு தலைமை தாங்க, வலிமை கொண்ட தலைவர் ஒருவர் இல்லை -ஞானசார தேரர்

ஏனைய மதங்களை போன்று பௌத்த மதத்துக்கு தலைமை தாங்க, வலிமை கொண்ட தலைவர் ஒருவர் இல்லையென பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்துக்கு இரண்டு நிக்காயாக்கள் உள்ளன. எனினும் ஏனைய மதங்கள், தன்னத்தை ஒரு தலைவரை கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் பௌத்த சாசனத்தை பாதுகாத்து அனைத்து பௌத்தர்களுக்கும் ஒரு தலைவர் தேவை என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்காக நேற்று நீதிமன்றத்துக்கு சென்றிருந்தபோதே அவர்  இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இலங்கையின் ஜனாதிபதி பௌத்தர் என்றபோதிலும் அவர் பெயரவிலேயே பௌத்தராக உள்ளார்.

இன்று பௌத்தர்கள் கிறிஸ்தவ தீவிரவாதத்தினால் சூழப்பட்டுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares