பிரதான செய்திகள்

பௌத்த பிக்குமாரின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்!தூக்கியறிய தயங்க மாட்டோம்.

சுட்டிக்காட்டும் குறைகளை சரி செய்து முன்நோக்கி செல்லவில்லை என்றால், அரசாங்கத்தை விரட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என துறவிகள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.


கொழும்பு அபயராம விகாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


எவ்வித பதவி மற்றும் சிறப்புரிமைகளை எதிர்பார்த்து துறவிகள் குரல் தற்போது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபடவில்லை. நாட்டுக்கும், இனத்திற்கும் நன்மை பயக்கும் அரசாங்கத்தை அமைப்பதே ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது.


கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கும், இனத்திற்கும் பிரச்சினைகள் ஏற்படும் வகையில் நாட்டின் ஆட்சியை முன்னெடுத்தன் காரணமாகவே அந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை துறவிகள் குரல் ஆரம்பித்தது.


தற்போதைய அரசாங்கம், அதனை ஆட்சிக்கு கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதில்லை என்பதை காணமுடிகின்றது.


நாங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்த அரசாங்கத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும். நாங்கள் சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக் கொண்டு முன்நோக்கி செல்ல வேண்டும்.
நாங்கள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தாலும் அரசாங்கத்துடன் நெருங்கி இருப்பவர்கள் வானும், மண்ணும் போல் இருக்கின்றனர்.


அரசாங்கம் தவறான வழியில் செல்கிறது என்பது எமக்கு தெரியவதால், அதனை சரி செய்வது எமது கடமை. பௌத்த பிக்குமாரின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்
. கறியில் போட்ட கருவேப்பில்லை போல் தூக்கி எறிய வேண்டாம். அரசாங்கம் தடம் மாறினால், அதனை தூக்கிய எறிய நாங்கள் தயங்க மாட்டோம்.


அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர எந்த வேலைகளை செய்யாதவர்கள் அரசாங்கத்தில் முன்னிலையில் உள்ளனர்.


பணம், உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு செய்தவர்கள் மறந்து போயுள்ளனர். இவர்களிடம் கவனமாக இருக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வவுனியா சிறையில் அநீதிகள்

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் -அஸாத் சாலி

wpengine

வவுனியாவில் தூக்கில் தொங்கிய குடும்பத்தர்.

wpengine